Thursday, June 3, 2010

ஒழுக்கச் சீர்கேடுகளை தடுப்பது சம்பந்தமான கமிட்டி நியமனம்

எமதூரில் நடைபெறும் ஒழுக்கச் சீர்கேடுகளை இல்லாமற் செய்யும் நோக்கோடு, பல சுற்றுக்களாக கூட்டப்பட்ட, எமதூர் பள்ளிவாசல் நிருவாகிகளைக் கொண்ட குழு, அதற்கென ஒரு இடைக்காலக் கமிட்டியை உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளது.  நேற்றிரவு MUSLIM LADIES STUDY CIRCLE  இல் நடபெற்ற, நான்கு பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இந்த ஏகமனதான முடிவு எட்டப்பட்டது. இதன்போது, ஒவ்வொரு பள்ளிவாசல் சார்பிலும் ஆறு பிரதிநிதிகள் வீதம் 24 பேரும், கூட்ட ஏற்பாட்டாளர்கள் மூவரும் உட்பட 27 பேர் வருகை தந்திருந்தனர்.

கமிட்டியின் தலைவராக அல் ஹாஜ் ஜிப்ரி அவர்களும், செயலளராக ஜனாப் ஸில்மி அவர்களும், பொருளாளராக அல் ஹாஜ் பயாஸ் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இந்த தெரிவுகளின் போது, பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் அனைவரும் மிகவும் விட்டுக் கொடுப்புகளுடன் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்ட விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்தப் புரிந்துணர்வு, எதிர்காலக் கஹட்டோவிட்டாவின் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இருந்தது.

எவ்வாறாயினும், இந்தக் கமிட்டியின் மீதுள்ள பொறுப்பு பாரியது; அவர்களால் மாத்திரம் நிறைவேற்றப்பட முடியாதது. ஊர் மக்களாகிய எம் அனைவரினதும் ஒத்துழைப்பின் தன்மையிலேயே இதன் வெற்றி தங்கியிருக்கிறது. எனவே, இடம்பெற்றுள்ள நியமனத்தை 'பளிச்!' பாராட்டுகின்ற அதே வேளை, தங்களாலான பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஊர் மக்கள் அனைவரையும் ஊரின் சிறந்த எதிர்காலம் கருதிக் கேட்டுக் கொள்கிறது.

Share online counter

No comments: