Tuesday, May 25, 2010

உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன் பரீட் நஸீர் மரணம்

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட எட்டு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான பரீட் நஸீர் தனது 58ஆவது வயதில் வெளியேற்றபட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கான புத்தள மீள் குடியேற்ற முகாம் ஒன்றில் வபாதானார் இவர் பல உலக சாதனைகளை படைத்துள்ளார் தனது 20 வயதில் முதல் உலக சாதனையை பதிவு செய்த இவர் . யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு சைக்கிளை பின்புறமாக செலுத்தியமை, 500 விஷப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாள்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடியமை, 72 மணிநேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகியன இவர் படைத்த சாதனைகளாகும்

புத்தளம் தில்லையடியை தற்போதைய வசிப்பிடமாகக் கொண்ட பரீட் நஸீரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை புத்தளத்தில் இடம் பெரும் என்று அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இக்கு தெரிவித்தார் இதேவேளை, பரீட் நஸீரின் மகனான உலக சாதனையாளர் பர்ஷான் நஸீர் கடந்த வருடம் ஜூன் மாதம் உலக சாதனையில் ஈடுபட்டிருந்த வேளையில், பாம்பு தீண்டி மரணமானார்


No comments: