" Peace through religion" என்ற தலைப்பில் உரை
இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கை வரவுள்ளார்- இன்ஷா அல்லாஹ்- என்று எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிகின்றன இவர் இந்தமாதம் 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் இவர் தனது அவுஸ்ரேலியாவுக்கான பயணத்தின் போது இலங்கைக்கும் வந்து செல்வார் என்று அறிய முடிகின்றது எனிலும் வருகின்ற 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையுள்ள தினங்களில்- 20-05-2010 – 30-05-2010 அவுஸ்ரேலியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய பிரச்சார நிகழ்சிகளில் கலந்து கொள்வார் என்று IRF இணையத்தள நிகழ்ச்சி நிரல் குறிபிட்டுள்ளது என்பதுடன் இலங்கை விஜயம் சமந்தமாக எதுவும் அதில் தெரிவிக்கபட வில்லை எனிலும் இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் 23 ஆம் திகதி மாலை 6.00 மணி தொடக்கம் 9.00மணி வரை கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள விசேட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மார்க்கத்தின் ஊடாக சமாதானம் – “Peace through religion” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார் என்று நாம் தொடர்பு கொண்ட தகவல்கள் அறியத்தருகின்றன விரிவாக பார்க்க
ஷபாப் மற்றும் பல இஸ்லாமிய நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது , என்பதுடன் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் அல்லாத நண்பர்களை இந்த நிகழ்சிக்கு அழைத்து வருமாறு கேட்டு கொள்ளபடுகின்றனர் 300,00 பேர் வரை தாம் எதிர்பார்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிகழ்சி பற்றிய கலந்துரையாடன் ஒன்று இன்று மாலை நடை பெற இருப்தாகவும் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment