வாசகர்களின் வினாக்களுக்கு குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் சட்டத்தீர்ப்புகள், சமகால அறிஞர்களின் விளக்கங்களின் பின்னணியில் பரந்த மனப்பான்மையுடன் அவற்றை அணுகி இந்த இணையத்தளம் வழங்க தயராக உள்ளது.
Monday, May 3, 2010
நேற்றிரவு அந்நியக் காடையர் சிலர் ஊரில் பகிரங்கமாக கள்ளச் சாராயம் குடிக்க முயற்சி;தட்டிக் கேட்ட போது புதுமையான விளக்கம் ;வாக்குவாதம் முற்றியதில் ஊரில் பதட்டம்
அந்நியக்காடையர்கள் மூன்று பேர் நேற்றிரவு ஊரின் பிரதானமான சனநடமாட்டம் ஊள்ள இடத்தில் வீதயோரமாக இருந்து கொண்டு பகிரங்கமாக சாராயம் அருந்த முற்பட்டுள்ளனர். இதை அவதானித்த சிலர் இங்கு அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் விலகிச் செல்லுமாறும் நியாயமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் எமது பிரதேசங்களுக்கு வந்து சாராயம் அருந்துவது மட்டுமல்லலாமல் வேறு பல தீய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அப்படியானால் ஏன் எமக்கு இந்த இடத்தில் சாராயம் அருந்த முடியாது என்று கேட்டார்களாம். அனால் எமது ஊருக்குள் இவ்வாறு நடப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட சகோதரர்கள் மீண்டும் சொல்லவே அவர்கள் பிரச்சினையொன்றை உருவாக்கும் தோரணையில் பேசியுள்ளனர். இருந்தும் ஊரைச் செர்ந்தவர்கள் அவர்களை அந்த இடத்திலிந்து அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் சந்தி வரை சென்ற காடையர்கள் துவேஷ மற்றும் தூசன வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருந்ததால் திரண்டு வந்த இளைஞர்கள் அவர்களை விரட்டியடித்தனர். உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் வருகை தந்ததும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதட்டம் உடனே தணிந்தது.
ஆனாலும் முஸ்லிம் பெயர்தாங்கி குடிகாரர்கள் செய்யும் வேலைகளால் அந்தக் காடையர்கள் கேட்ட கேள்வியும் நியாயமானது என சிலர் கவலையுடன் பேசிக் கொள்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் ஊருக்குள் முக்கியமான இடங்களில் சாராயம் மற்றும் கஞ்சா ஆபாசப்படங்கள் பரிமாறப்படவதாகவும் நீண்ட நாட்களாக இந்த செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இவற்றை அம்பலப்படுத்தி தடுப்பதற்காக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்ற ஆதங்கத்தையும் கூடியிருந்த மக்கள் வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிந்தது.
No comments:
Post a Comment