Tuesday, May 18, 2010

ஊரில் நேற்றிரவு கடமையான மழை காரணமாக , மீண்டும் வெள்ளம்





 
ஊரில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு போக்கு வரத்து முழுமையாகவே துண்டிக்கப்பட்டுள்ளது.வழமையாக ஏற்படும் வெள்ளத்தை விட இம்முறை அளவும் பாதிப்பும் மிக அதிகம்.ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.வெள்ளம் 5 அடியை உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தஞ்சம் புகுந்துள்ளனர்.நலன் விரும்பிகளும் ஊர்மக்களும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வழமையாக ஏற்படும் இந்தப் பாதிப்பிற்கு ஒருதிட்டப்படுத்தப்பட்ட நிவாரண முறைமை இன்மை ஒரு பெருங் குறையாகவே தென்படுகிறது.முறைப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த நிவாரண வழங்கல்கள் பற்றிய ஒரு சந்திப்பிற்கு நலன்விரும்பிகள் முன்வருவது துன்பங்களையும் இழப்புக்களையும் இனிவருங்காலங்களிலாவது குறைக்க உதவும் என நம்புகிறோம்.இன்சா அல்லாஹ்


No comments: