Friday, May 7, 2010

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் போர்க்களத்திலிருந்து இராஜதந்திரக் களத்திற்கு மாறியுள்ளது: சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான பரப்புரைகள் நாடுகடந்த தமிழீழ அரசின் ஊடாக முன்னெடுக்கப்படடுவரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் கடந்த வருடம் வரைக்கும் போர்க்களங்களில் இடம்பெற்றுவந்த மோதல்கள் தற்போது இராஜதந்திரக் களத்திற்கு மாற்றம் கண்டிருக்கிறது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறியுள்ளார்.

நாட்டினது நலன்களுக்குப் பாதகமாக அமையும் வகையில் பல முனைகளிலிருந்தும் எழும் வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்குச் சிறிலங்கா முகம்கொடுக்கிறது எனக்கூறிய வெளிவிவகார அமைச்சர் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் தொடர்புடைய நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். 

தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தினை அரசாங்கம் எப்போது இல்லாமற் செய்யப்போகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பீரிஸ் இந்தக் கருத்தினை முன்வைத்தார். 

இதுபோன்றதொரு சட்ட மூலத்தினை வைத்திருக்கவேண்டிய தேவை எப்போது இல்லாமற் போகிறதோ அப்போதுதான் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தினை முழுமையாக இல்லாமற் செய்யும் எனக் குறிப்பட்ட அமைச்சர் அவசரகாலச் சட்டத்தின் முக்கியமான சில சரத்துக்களை அரசாங்கம் எடுத்திருப்பதாகக் கூறினார். 

அரசாங்கத்திற்கு எதிராக விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழுக்கள் முன்னெடுத்துவரும் மோசமான பரப்புரைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்றதொரு சட்ட மூலம் நடைமுறையில் இருக்கவேண்டியது அவசியம் என்பதை அரசாங்கம் மீளவும் வலியுறுத்தியிருப்பதாக பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார். 

அவசரகாலச் சட்டமானது எப்போது முழுமையாக இல்லாமற்செய்யப்படும் என ஆரூடம் கூறும் நிலையல் அரசாங்கம் தற்போது இல்லை என்றார் அவர்.
'விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் சிறிலங்காவிற்கு எதிரான அச்சுறுத்தல் இன்னமும் குறைந்துவிடவில்லை' என்கிறார் பீரிஸ். அவசரகாலச் சட்டத்தினை இல்லாது செய்யுமாறு எந்தவொரு வெளிநாடும் இலங்கையினைக் கோரவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்

No comments: