நேற்று ஊரில்ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நேற்று நிவாரணம் வழங்கப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பௌஸி அவர்களின் நேரடித் தலையீட்டுடன் அமைச்சின் செயலாளர் திருமதி மரீனா மொஹமட் அவர்கள் நேற்று ஊருக்கு வருகை தந்து நிவாரணங்களை வழங்கினர். பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுப்பாவனைப் பொருட்கள் இந்த நிவாரணப்பொதியில் அடங்கியிருந்தன. இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் பசில்ராஜபக்ஷ அவர்களின் செயலாளரும் இங்கு வருகை தந்திருற்தார். இந்த நிவாரணப் பங்கீடு தொடர்பா கஹடோவிட குரவலான கிராம சேவை உத்தியோகத்தர்களோடு ஊர்ப்பிரமுகர்களும் இணைந்து ஏற்பாடு செய்ததாக கிராம சேவை உத்தியோகத்தர் அப்துல் ரவுப் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக ஊரைச் சேர்ந்த பலர் பிரதி அமைச்சர் மேர்வி சில்வாவிடம் வpடுத்த வேண்டுகோளுக்கமைய சுமார் 60 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு சனிக்கிழமை முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நேற்று முதல் வழமைக்குத் திரும்பியிருந்தது. .
இவர்களது இனிய சேவைக்கு ஊர் மக்கள் அனைவர்கள் சார்பாக நன்றிகள்

No comments:
Post a Comment