Monday, April 19, 2010

ஊரனதும் வளமான எதிர்காலம் தொடர்பில் கவனமெடுத்து அவர்களை நெறிப்படுத்துவது உங்களுடைய கவனமே...

Kahatowita 11144  உபதபாலகத்திற்கருகில் பாடாசாலை மாணவர்கள் சிலரும், பாடாசாலை செல்லாத மாணவர்கள் சிலரும் தினமும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவதாகவும் இதன்போது தத்தமது கைத்தொலைபேசியிலுள்ளவற்றை பரஸ்பரம் இந்த இளைஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதுடன் அக்கம் பக்கத்தவர்களுக்கு இடைஞ்சலாகும் அமைப்பில் கைத்தொலைபேசிகளில் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும் அப்பகுதிவாழ் அன்பர்கள் சிலர் நமக்குத் தெரிவித்துள்ளார்கள். இவ்விளைஞர்களின் இந்தக் கும்மாளங்கள் இரவு ஒன்பது மணியையும் தாண்டி விடுகின்றமையால் அயலவர்களுக்கு பலத்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

  பாடசாலைக்குள்ளும், வெளியிலும் உலாவரும் கிசுகிசுப்புக் கடிதங்களையும் இந்த சந்திப்பின்போது இவ்விளைஞர்கள் தம்மிடையே பரஸ்பரம் காண்பித்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது. தலைசிறந்த சமூக கூழலொன்றை உருவாக்குவதில் இது போன்ற நடத்தைகள் பாரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கடந்த காலங்களில் பாடசாலையில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், அண்மைக்கால க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் போன்றன நமது இளைய சமூகம் ஒழுக்கத்திலும், கல்வியிலும் தடம் புரண்டு செல்கின்றது என்பதை உறுதி செய்துள்ளன. ஆகவே பெற்றோர், பள்ளி வாசல்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஒன்றினைந்து இந்த இளைஞர்களினதும் நமது ஊரனதும் வளமான எதிர்காலம் தொடர்பில் கவனமெடுத்து அவர்களை நெறிப்படுத்துவது காலத்தின் அத்தியவசியத் தேவையாகின்றது. 



No comments: