Tuesday, April 13, 2010

உயிரினங்கள்

ஓட்டன் சம்வெளியின் பாதையருகே சாம்பர் மான்
இங்கு காணப்படும் வனங்கள் 5000 அடிக்கு மேல் உயரமான இடங்களிலுள்ள காடுகளை ஒத்ததாகும். இந்தக் காடுகள் தாவரவியலாளர் சர். ஜோசஃப் ஊக்கர் என்பவரின் முயற்சிகள் காரணமாக 1873[10] இங்கு 57 வகையான தாவரவகைகள் காணப்படுவாதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 29 வகைகள் இலங்கைக்கே உரிய தாவர இனங்களாகும். [11]  முதல் சிறிதளவான பாதுகாப்பைப் பெற்று வந்தன.

இக்காடுகளில் கலோபியம் வகை (Calophyllum sp.), சிஸ்ஜியம் வகை ( Syzygium sp.), இராட்சத மரப்பன்னம் (Cyathea sp.) போன்ற தாவரங்கள் முக்கியமானவையாகும். நெலு (Strobilanthes sp.), போவிட்டியா (Osbeckia sp.), பினர (Exacum trinervium) முதலிய இலங்கைகே உரிய மலரினங்களும் பல ஓர்கிட் இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இலங்கைக்கே உரிய கர்னோடியா மூங்கில்கள் (Arundinaria densifolia) ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. புல்தரைகளில் கிறிஸ்போகன் செலனிகம் (Chrysopogon zeylanicum), கர்னோடியா மியுடீகா (Garnotia mutica) வகைகள் முக்கிய இடத்தைப் பெருகின்றன. [7]

இங்கு 14 இனங்களைச் சேர்ந்த பாலூட்டி விலங்குகளும், 16-20 ஈரூடக வாழிஊர்வன இனங்களும், 98 பறவையினங்களும், 2 மீனினங்களும், 20 வகையான வண்ணத்துப் பூச்சியினங்களும் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 98 பறவையினங்களில் 21 இலங்கைக்கே உரியவையாக கணக்கிடப்பட்டுள்ளன. பல பறவைகள் வேறுநாடுகளில் இருந்து குளிர்காலத்தைக் களிக்க வருபவையாகும். [6]70% இலங்கைக்கே உரிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு யானைகள் காணப்பட்டப் போதும் 1800களில் பிரித்தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்று இவை  இனங்களும், 6

\\அருகிவிட்டன. இங்கு 4000 சாம்பர் மான்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள் என்பன இங்கு காணப்படும் ஏனைய பெரிய பாலூட்டிகளாகும். இலங்கைக்கே உரிய கரடிக் குரங்கு, புள்ளிப் பூனைகள் என்பனவும் இங்கு காணப்படுகின்றன. [7]



No comments: