Thursday, April 22, 2010

நேற்று நள்ளிரவு ஊரில் இடி மின்னடன் கடும் மழை – வெள்ளம் ஏற்படும் சாத்தியம்

 கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவிய போதும் நேற்று 2010.04.21 நள்ளிரவு இடியுடன் கூடிய கடுமையான மழை பொழிந்தது. கடந்த வாரம் இடைக்கிடையே மழை பெய்து வந்த போதும் கடுமையான உஷ்னம் நிலவியது. நேற்று இரவு சாதாரணமான மழை பொழிந்ததோடு நள்ளிரவில் திடீரென இடியுடன் கூடிய கடும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனால் பல வீடுகளில் மின்குமிழ்கள் தொலைக்கட்சிப் பெட்டிகள் கம்பியூட்டர்கள் உட்பட பல மின்சார உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதனிடையே அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்திருப்பதால் இன்றும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

Share


No comments: