கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு. வுpஜித ஹேரத் அவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று கஹடோவிட ஹிசாம் ஹாஜியார் வீட்டுக்கு வருகை தந்தார். வாக்களித்த மக்களுக்கு தமது கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்ததோடு தேர்தல் காலத்தில் தமது கட்சி நடவடிக்கைகளை மேற் கொண்டவர்களுக்கும் விசேட நன்றியைத் தெரிவித்தார்.

ஹிசாம் ஹாஜியார் பாராளுமன்ற உறுப்பினருக்கு பகல் போசனம் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயக தேசிய முண்ணனி ஆதரவாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆதரவாளர்களும் ஹிசாம் ஹாஜியார் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர். அனைவருடனும் மிகவும் சந்தோசமாகவும் சகஜமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாடினார்.
Share
No comments:
Post a Comment