முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கின்ற எமது கிராமத்தில் அந்நியக் கலாச்சாரமும் இஸ்லாம் வெறுக்கின்ற செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்றமையை கவனத்திற் கொண்டு அவசரமான சீர்திருத்த முயற்சியொன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் கலந்துரையாடலொன்று 2010.04.17 ஆம் திகதி இரவு8.30 மணியளவில் கஹடோவிட முஸ்லிம் ஸ்டடி சேகிள் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உலமாக்கள் உட்பட சமூகம் பற்றிய அக்கறை உள்ள பலரோடு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சமூகசீர்கேடுகள் நடைபெறுகின்ற முறைகள் பற்றியும் பிள்ளைகளைப் பற்றிய பெற்றோரின் அக்கறையின்மை பற்றியும் இன்னம்பல விடயங்கள் பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதோடு இவற்றை தீர்ப்பதற்கான முழு அதிகாரம் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களை மையமாக வைத்த மாத்திரமே இச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பது பலரின் அபிப்பிராயமாக இருந்ததால் பள்ளிவாசல்களுக்கு இது பற்றி அறிவித்து பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள் உட்பட்ட விழிப்பணர்வுக் குழுவொன்றை அமைப்பது பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்தோடு தொடர்தும் இம்முயற்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நல்ல முயற்சி வெற்றிபெற அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இந்த நல்ல முயற்சி வெற்றிபெற அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment