Friday, April 2, 2010

ஜெனரல் பொன்சேகாவின் வெற்றியை அரசு பறித்துக் கொண்டது – கஹடோவிடவில் விஜித ஹேரத்



பாராளுமன்ரத் தேர்தலில் ஜனநாயக தேசிய முண்ணனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கஹடோவிட கோழிக் கடை சந்தியில் இன்று (2010.04.02) மாபெரும் பிரச்சாரக் கூட்டமொன்று இடம் பெற்றது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்திய ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் சிறையில் அடைத்துள்ள இந்த நிலையில் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டவும் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் வாழ்க்கைச் செலவைக்குறைக்கவும் அரசைத் தோற்கடிப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்று குறிப்பட்டார்.

இன்று போலியான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வடக்கின் புனரமைப்பக்காக கிடைத்த நிதியை அநியாயமான முறையில் தேர்தலுக்காக இந்த அரசு செலவிடுகின்றது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் செய்யாத அபிவிருத்திகளை தேர்தலைக் கருத்திற் கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக ஆரம்பித்துள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியைக் களவெடுத்து ஆட்சி பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி இன்று இனவாத்தைத் தூண்டி அரசியல் நடாத்துகின்றார். உண்மையான தேசாபிமானிகளைப் புறந்தள்ளிவிட்டு போலியானவர்களையும் இனவாதிகளையும் முன்னிறுத்தி நாட்டை பாதாளத்துக்கு இட்டுச் செல்கின்றார். எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த அரசைக்கவிழ்க்க அனைத்து பேதங்களையும் மறந்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும். கஹடோவிடவில் இவ்வளவு பிரமாண்டமான கூட்டமொன்றை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டாh.

கூட்டத்தில் வேட்பாளர் நஸார் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளரமான வருண ராஜபக்ஷ எமது ஊரின் மூத்த அரசியல்வாதி ஹ_ஸைன் நானா ஆகியோரும் உரையாற்றினர்.

Share

1 comment:

Anonymous said...

foooooooooooool