இரண்டு ரக்அத்கள் தொழுவது
ஒருவர் பள்ளியினுள் நுழைந்து விட்டார் என்று சொன்னால், அவர் நுழைந்ததற்காக மஸ்ஜித் காணிக்கைத் தொழுகையாக நபில் இரண்டு ரக்அத் தொழ வேண்டும்.
இன்னும், ஜும்ஆ நாளின் பொழுது, ஜும்ஆ உரை நிகழ்த்துவதற்காக வேண்டி இமாம் மிம்பரில் ஏறி விட்ட பின் பள்ளியினுள் நுழைகின்றவர், இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தான் பள்ளியில் அமர வேண்டும். (முஸ்லிம்).
கிடைத்த இடத்தில் அமருவது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் அமர வேண்டும் என்பதற்காக உங்களது சகோதரர் அமர்ந்த இடத்தை விட்டும் எழுந்திருக்கச் சொல்லாதீர்கள், மாறாக, சற்று நகர்ந்து இடம் கொடுக்கச் சொல்லுங்கள். (முஸ்லிம்)
உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிச் செல்வது அல்லது இரண்டு மனிதர்களுக்கிடையே செல்வது
ஜும்ஆ நாளின் பொழுது ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒரு மனிதர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூது)
இமாமினுடைய நிலை வேறானது. அவர் பிற மக்களைத் தாண்டிச் சென்றால் தான் அவர் உரை நிகழ்த்தக் கூடிய மிம்பரை அடைய முடியும் என்றிருப்பதால், இமாம் மற்ற மக்களைத் தாண்டிச் செல்வதில் தவறில்லை.
மேலும், முன்னே இடம் இருக்கும் நிலையில், தாண்டிச் சென்றாலொழிய அந்த இடத்திற்குப் போக முடியாது என்றிருக்கும் பொழுதும், இன்னும் முன் வரிசையில் உட்காருவதை விட்டு விட்டு பின் வரிசையில் மக்கள் அமர்ந்திருக்கும் பொழுது, முன் வரிசையை அடையும் பொருட்டு ஒருவர் மற்ற மக்களைத் தாண்டிச் செல்ல முடியும்.
அல் ஹுஸைன் என்பவர் கூறுகின்றார், 'பள்ளியின் வாசலில் உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் பொழுது, அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதைப் போல, ஒரு மனிதர் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்து விட்டு, (ஏதோ காரணத்திற்காக) வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, பின் திரும்பி வருவாராகில், மீண்டும் அவர் அந்த இடத்தில் அதே உள்ள இடத்தில் வந்து அமரலாம். (அல் முக்னீ, பாகம் 2, பக்கம் 39).
குத்பாவை செவி மடுத்துக் கேட்பது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இமாம் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது, உங்களது நண்பரிடம் 'செவிமடுப்பீராக' என்று கூறினீர்கள் என்றால், நீங்கள் அதிகமாகப் பேசி விட்டீர்கள். (அபூதாவூது).
பேசுவதற்குப் பதிலாகச் சைகை செய்வது கூடும்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியினுள் நுழைந்தவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இறுதி நாள் எப்பொழுது (வரும்)? என்று கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த மக்கள் அவரைப் பேசாமல் இருக்குமாறு சைகையில் கூறினார்கள். (ஆனால்) அந்த மனிதர் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை மூன்று முறை கேட்டார், அப்பொழுது அங்கிருந்த மக்கள் சைகையால், அமைதியாக இருக்கும்படிக் கூறினார்கள். (இப்னு குஸைமா)
இமாமிற்கு மிக அருகில் அமருவது
இமாமிற்கு மிக அருகில் அமர வேண்டும் என்பதை எந்தளவு அதிகமாக ஊக்கவிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாத மக்களாக, முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வைத் துதிப்பதற்காக வாருங்கள், மேலும் இமாமுக்கு மிக அருகாமையில் நெருக்கமாக அமருங்கள். இமாமுக்கு மிக தூரமாக இருக்கக் கூடியவன், அவன் சொர்க்கத்தை விட்டும் தூரமாக, இன்னும் தூரமாகக் கூடியவனாக இருப்பதோடு, எதுவரையெனில் அவன் அதில் நுழைய முடியாத அளவுக்குத் தூரமானவனாகி விடக் கூடியவனாகி விடுவான். (அபூதாவூத்)
பேசுவதைத் தவிர்க்க வேண்டும்
குத்பா பிரசங்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் இருப்பவரிடம் பேசுவதும் கூடாது. அருகில் இருப்பவரைப் பேசாதீர்கள் என்றும் கூறுவதும் கூடாது.

No comments:
Post a Comment