Sunday, April 4, 2010

அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

ஏப்ரல் எட்டாம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக வுள்ள புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைவடையும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


        கடந்த பாராளுமன்றத்தில் 25 முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தனர். மொத்தமாகவுள்ள 225 ஆசனங்க ளில் இது 11 வீதமாகும். தற்போ தைய சனத்தொகைக் கணக்கெடுப் பின் படி முஸ்லிம் சனத்தொகை எட்டு வீதமாகக் கொள்ளப்படு கிறது. இதன்படி குறைந்தது 18 முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய சனத் தொகை விகி தாசாரம் பேணப்படும்.

        சிலபோது  15 அல்லது 18 ஆக முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவடை யலாம் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும்இ முஸ்லிம் எம்.பி.க் களின் எண்ணிக்கை குறைவடை யும் வாய்ப்புகள் துல்லியமாகத் தெரிகின்றன. கடந்த பாராளுமன் றத்துடன் ஒப்பிடும்போது 25 தொடக்கம் 40 வீதம் வரை இவ் வீழ்ச்சி அமையக் கூடும் எனவும் அனுமானிக்கப்படுகிறது.

        பல பிரபல்யங்கள் தோல்வி யடைவதற்கான வாய்ப்புகள் பர வலாகக் காணப் படுவதாக களத்தி லிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

        இந்நிலையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் அவதான மாகவும் முன்னெச் சரிக்கையுடனும் வாக்களிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அரசியல் ஆய் வாளர்களும் வேண்டிக் கொண் டுள்ளனர்.


 

Share

No comments: