
கஹட்டோவிட்ட,
1. கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிக்கு முன்னாள் செல்கின்ற ஒகடபொல வீதியை 15 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டது.
2. கஹட்டோவிட்ட மௌலான மாவத்தை வீதியை 15 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டமை.
4. கஹட்டோவிட்ட பிரதான வீதியை (பழைய பரக்கத் ஹாட்வெயார் இற்கு முன்னால்) 10 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டமை.
5. கஹட்டோவிட்ட பிரதான வீதியை (ஸாவியாக்கு முன்னால், VC கிணற்றுக்கு முன்னால், இறைச்சிக்கடை காதர் ஹாஜியார் வீட்டுக்கு முன்னால் 15 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டமை.
6. கஹட்டோவிட்ட முஹியத்தீன் பள்ளி வாயலுக்கு முன்னால் செல்கின்ற ஒகடபொல வீதியை 6 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டமை.
7. கஹட்டோவிட்ட Y.M.M.A மாவத்தை வீதி 5 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டது.
8. கஹட்டோவிட்ட அல் பத்ரியா மாகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தின் இரண்டாம் மாடி 20 இலட்சம் ரூபா செலவில் கொன்கிறீட் இட்டு புனரமைக்கப்பட்டமை.
9. கஹட்டோவிட்ட அல் பத்ரியா மாகா வித்தியாலயத்துக்கு 3 இலட்சம் ரூபா பொருமதியான 6 கணனிகள் வழங்கப்பட்டது.
10. கஹட்டோவிட்ட அல பத்ரியா மாகா வித்தியாலயத்துக்கு 3 இலட்சம் ரூபா செலவில் கணனிப் பிரிவு அமைக்கப்பட்டது.
11. கஹட்டோவிட்ட அல் பத்ரியா மாகா வித்தியாலயத்தின் கட்டிட திருத்த வேலைக்காக 8 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டன.
12. கஹட்டோவிட்ட முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு 1 இலட்சம் ரூபா செலவில் கண்ணாடி பிடின்ங்ஸ் செய்து கொடுக்கப்பட்டது.
13. கஹட்டோவிட்ட முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு 50000 ரூபா செலவில் சைக்கில் தரிப்பிடம் நிர்மானிக்கப்பட்டது.
14. கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளி வாசல் 150000 ரூபா செலவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டது.
15. கஹட்டோவிட்ட ஸாவியாவைச சுற்றி 50000 ரூபா செலவில் மதில் சுவர் கட்டப்பட்டது.
இப் பெறுமதியான வேலைத்திட்டங்களை மேன்மை தாங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஜந்து வருட காலத்தினுல் கஹட்டோவிட்டாவுக்கு செய்யப்பட்ட சேவைகளாகும்.
நன்றி
தலைவர் நிர்வாக சபை உருப்பினர்கள்,
சரீ லங்கா சுதந்திர கட்சியின் கஹட்டோவிட்ட மேற்குக் கிளை,
இல.45 கீழ் 3 கஹட்டோவிட்ட,
தொ.பேசி 0777176266
5 comments:
fools lies
There are several false news. there is no connection at any way to Basil Rajapaksha and these developments. Fools..... most of the services mentioned here are by Muslim Congress. Foolsih publish
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செய்த சேவைகள் என்ற தலைப்பில் தங்களது தளத்தில் ஒரு செய்தி பிரசுரமாகியுள்ளது. இதில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்கள் இருப்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கஹட்டோவிட பாலிகாவிற்கு பத்துலட்சம் ரூபாவில் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என்ற தகவல் மேற்படி பிரசுரத்தை வெளியிட்டவர்கள் எந்தளவு தூரம் தமது சுயநலத்திற்காக உண்மைகளை மூடி மறைக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும். உண்மையில் மேற்படி பத்துலட்சம் ரூபா இப்பாடசாலை கட்டிடத்திற்காக எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை இச்செய்தியை வெளியிட்டவர்களும் இதனை இணையத்தில் பிரசுரித்தவர்களும் ஊர் விவகாரத்தில் அக்கறையுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூற விரும்புகிறேன்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களோடுள்ள தனிப்பட்ட உறவின் விளைவாக புத்தளத்தில் அவரிடம் இந்த விடயம் சொல்லப்பட்டபோது கொழும்பிலுள்ள தனது அமைச்சின் ;அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். அதன் பிரகாரம் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் அஹமட் முனவ்வர், அல்ஹாஜ் பயாஸ், மௌலவிகளான பைரூஸ், சஹ{ல் ஹமீத், முஜீப், றிபாய் மற்றும் அமைச்சரின் பல்கலைக்கழக சக மாணவன் எம்.எஸ்.எம் றஜப் ஆகியோர் அங்கு சென்று அமைச்சரை சந்தித்த முதல் நாளிலேயே மேற்படி நிதியை அவர் ஒதுக்கித் தந்தார். அத்துடன் குழுவினரின் வேண்டகோளின் பேரில் அடிக்கல் நாட்டுவதற்காகவும் அவர் வருகை தந்து கட்டிடப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதன்பின் இந்த நிதியை பாடசாலைக்கு கிடைக்கச் செய்யாமல் இருப்பதற்கான சில சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த விடயம் இறுதித் தருவாயில் தெரிய வந்தபோது உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம் முஹம்மத் அவர்களுடைய நேரடி நடவடிக்கைகள் ஊடாக இந்த நிதி திரும்பிச் செல்லாமல் பாதுகாக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மௌலவிகாளன சாஹ{ல் ஹமீத், பைரூஸ் ஆகிய இருவரும் இதற்காக தொடர்ந்து பாடுபட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தப் பிண்ணணியில்தான் பாலிகாவின் கட்டிடத்திற்கான நிதி கிடைக்கப்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த அவர்களின் ஆட்சியின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியின் மூலமே கட்டடம் நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. அமைச்சர் ரிஷாத் ஆளும் கட்சியில் இருந்துகொண்டு தனது சமூகம் என்ற நோக்கில் செய்த ஒரு வேலையை இதில் எந்த சம்பந்தங்களும் வைத்துக்கொள்ளாத ஒத்துழைப்புக்கள் தறாத தனிநபர்களோ கட்சிகளோ அரசியல் இலாபம் கருதி தமது பணியாக காட்டுகின்ற மோசமான பண்பாட்டை இங்கு வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கஹட்டோவிட பாலிகாவிற்கு பத்துலட்சம் ரூபாவில் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என்ற தகவல் மேற்படி பிரசுரத்தை வெளியிட்டவர்கள் எந்தளவு தூரம் தமது சுயநலத்திற்காக உண்மைகளை மூடி மறைக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
நன்றி இவ்வாறான தகவல்களைப் பற்றி ஆராய்ந்ததற்கு .நீங்கள் உண்மையான கருத்தை முன்வைததீர்கள் என்றாலும் கூட நேற்று பிரசுரிக்கப்பட்ட அந்த பத்திரிகையிலிருந்து இந்த தகவலை நாங்கள் இணையத்தளத்தில் பிரசுரப்படுத்தினம்.
அவ்வாறான இன்னும் பிழையான தகவல்கள் காணப்பட்டால் உங்கள் கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள் நாங்கள் இனிவரும் காலங்களில் திருத்திவிடுவம்.
மீண்டும் எமது நன்றிகள் அந்த கருத்தை விட்டுச் சென்றவருக்கு.
muttal
Post a Comment