Wednesday, March 3, 2010

ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech)


உலகில் உள்ள ஒவ்வொரு மொழிகளிலும் பல்லாயிரக் கணக்கான சொற்கள் உள்ளன. ஒரு மொழியின் முதன்மையானது சொற்கள் (Words) ஆகும். இச்சொற்களின் பயன்பாடுகள் வெவ்வேறானவைகளாகும். பொருற்களின் பெயர்களை குறிப்பதற்கான சொற்கள் பெயர்சொற்கள் என்றும், செயல்ப்பாடுகளை விவரிப்பதற்கான சொற்கள் வினைச்சொற்கள் என்றும், பொருற்களின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் பெயரெச்சங்கள் என்றும், வினையின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் வினையெச்சங்கள் என்றும், சொற்களை இணைப்பதற்கு இடையே பயன்படும் சொற்கள் இணைப்புச்சொற்கள் என்றும், சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்வதற்கு; சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை தமிழில் “பேச்சின் கூறுகள்” என்றழைக்கப்படுகின்றது. சிலர் “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.

ஆங்கிலத்தில் சொற்களை பிரதான எட்டுக் கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளே “ஆங்கிலப் பேச்சின் கூறுகள்” (Parts of Speech in English) ஆகும்.

ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)

Nouns – பெயர்சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
Prepositions – முன்னிடைச்சொற்கள்
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
Interjections - வியப்பிடைச்சொற்கள்

மேலதிக விளக்கங்களை கீழே பாருங்கள்.

Nouns – பெயர்சொற்கள்
---------------------------------------------------------------
பொருற்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Manager - நிர்வாகி
Car - மகிழுந்து
England - இங்கிலாந்து
Sarmilan - சர்மிலன்
Tamil - தமிழ்

He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. மேலும் >>>

Verbs – வினைச்சொற்கள்
---------------------------------------------------------------
வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Do - செய்
Come - வா
Speak - பேசு
Ask - கேள்
Go - போ

I do a job.
நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
---------------------------------------------------------------
ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படுபம் சொற்கள் பெயரெச்சச் சொற்களாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Red - சிகப்பு
Yellow - மஞ்சல்
Big - பெரிய
Small - சிறிய
Beautiful - அழகான

She is a beautiful girl.
அவள் ஒரு அழகான பெண். மேலும் >>>

Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
---------------------------------------------------------------
வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சச் சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Usually - சாதாரணமாக
Really - உண்மையாக/ உண்மையில்
Immediately - உடனடியாக
Quickly - வேகமாக
Softly - மென்மையாக

Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
---------------------------------------------------------------
ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

He - அவன்
She - அவள்
It - அது
him - அவனை
her - அவளை

Sarmilan speaks in English.
சர்மிலன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். மேலும் >>>

Prepositions – முன்னிடைச்சொற்கள்
---------------------------------------------------------------
ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்பெயர்சொற்களுக்கும் முன்பாக இடையில் பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

in - இன், இல்
at - இல், ஆல்
on - இல், மேல்
for - காக
since - இருந்து

Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்? மேலும் >>>

Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
---------------------------------------------------------------
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்களின் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.

எடுத்துக்காட்டாக:

and - உம்
but - ஆனால்
or - அல்லது
than - விட
because - ஏனெனில்

I ate bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன். மேலும் >>>

Interjections - வியப்பிடைச்சொற்கள்
---------------------------------------------------------------
பேச்சின் பொழுது வியப்பை ஆச்சரியத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Wow!
Ha!
Hi!hello!
Oh!

Wow! I won the match!
வோவ்! நான் ஆட்டத்தில் வென்றேன்! மேலும் >>>

Eight Parts of Speech in a Sentence
---------------------------------------------------------------
ஆங்கில மொழியின் பிரதானப் பேச்சின் கூறுகள் எட்டும் ஒரே வாக்கியத்தில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள வாக்கியங்கள் ஊடாக பார்க்கலாம்.

Sarmilan go. (Two Parts)
Noun Verb
சர்மிலன் போகிறான்.

Sarmilan go to School. (Three Parts)
Noun Verb Preposition Noun
சர்மிலன் போகிறான் பாடசாலைக்கு.

Sarmilan and his sister go to school. (Five Parts)
Noun Conjunction Pronoun Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Sarmilan and his little sister go to school. (Six Parts)
Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Wow! Sarmilan and his little sister go to school happily.
Interjection Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun Adverb (All Eight Parts of Speech)
வாவ்! சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சியுடன்.

பேச்சின் கூறுகளின் பயன்பாடுகள்
---------------------------------------------------------------
எமது உடலின் செயல்பாடுகளுக்கு கை, கால், தலை, மூட்டு என எமது ஒவ்வொரு உடற்கூறுகளும் பயன்படுவதுப் போன்றே, எமது பேச்சின் பொழுதும் பேச்சின் கூறுகளான சொற்கள் பயன்படுகின்றன. எமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்கான தனித்த செயல்பாடுகளைக் கொண்டிருப்பது போன்று; ஒவ்வொரு சொற்களின் வகைகளும் அதற்கதற்கான தனித்த செயல்பாடுகளை கொண்டுள்ளன. அதேவேளை அச்சொற்கள் தனித்தும் ஒருமித்தும் இடத்திற்கு ஏற்ப மாறுப்பட்டும் பயன்படுவனவாகும்.

இப்பேச்சின் கூறுகளை வகைப்படுத்தி கற்பது ஆங்கில மொழியின் ஒவ்வொரு சொற்கூறுகளும் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை எளிதாக விளங்கிக்கொள்ள உதவும். அதேவேளை ஆங்கிலப் பேச்சின் பொழுது, ஆங்கில வார்த்தைகளில் சொற்களின் பயன்பாட்டை சரியாக வடிவமைத்து பேசவும் வாக்கியங்களை வடிவமைத்து எழுதவும் முடியும்.

நன்றி

No comments: