மாகாண சபை உறுப்பினர் திரு ருவன் விஜயவர்தன அவர்கள் இன்று கஹடோவிட தாய்மார் கழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு (CLINIC) விஜயம் செய்தார்.
கஹடோவிட ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் ஜெஸ்மின் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க நிலையத்துக்கு சுற்று மதில் அமைத்துத் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த அவர் அந்த வேலைகளைத் தொடங்குவது சம்பந்தமாக கலந்தாலோசிக்கவும் பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலுமே வருகை தந்திருந்தார்.
இங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மாகாண சபைத் தேர்தலில் முதலாவது இடத்தைப் பெற்று வெற்றி பெறுவதற்கு உதவி செய்த இப்பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாகாண சபை மூலம் தனக்கு கிடைக்கின்ற நிதியின் மூலம் முழு கம்பஹா மாவட்டத்துக்கும் தேவையான அனைத்தையும்
செய்யமுடியாதிருப்பதாகவும் இப்பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை தான் தனது சொந்தப் பணத்தைக் கொண்டு செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
ஆதன்படி தேர்தலுக்கு முன்னதாகவே சுற்று மதிலை அமைத்துத் தருவதாக வாக்களித்த அவர் பாராளுமன்ற உறுப்பினரானதன் பின்னர் மேலும் பல சேவைகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்தின் இறுதியில் நிலையத்தைச் சுற்றிப்பார்வையிட்ட அவர் இச்சேவையைச் செய்யக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment