Friday, March 19, 2010

கஹடோவிட வை.எம்.எம்.ஏ. கிளை நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா கொழும்பில்

கஹடோவிட வை.எம்.எம்.ஏ. கிளை இரண்டாவது முறையாகவும் நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறியில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (2010.03.12) பிற்பகல் கொழும்பு 09 இல் அமைந்துள்ள வாமி நிறுவலனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு வாமி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ரிஸ்வான் (நளீமி) தலைமை தாங்கினார்.

வாமி நிறுவனத்தில் நடைபெற்ற ஊடக பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களோடு கஹடோவிட எல்லலமுல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கும் இங்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பயிற்சி நெறிக்கு அணுசரணை வழங்கிய முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் கஹடோவிட வை.எம்.எம்.ஏ. கிளை தலைவர் அல்ஹாஜ் ஜவ்ஸி பொருளாளர் அல்ஹாஜ் ஜிப்ரி பாட நெறி இணைப்பாளர் அஷ்ஷெய்க் முகிதீன் (இஸ்லாஹி) வாமி நிறுவன ஊடகப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ராஷித் (நளீமி) ஆகியோர் பங்குபற்றி சான்றிதழ்களை வழங்கியதாக செயலாளர் அல்ஹாஜ் ஸாஜஹான் தெரிவித்தார்.


No comments: