Friday, March 19, 2010

இலவச முதலுதவிச் சிகிச்சை பயிற்சி முகாம்

மேல் மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற வேட்பாளருமான ருவன் விஜயவர்தன அவர்களின் ஏற்பாட்டில் கஹடோவிட தாய்மார் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இலவச முதலுதவிச் சிகிச்சை பயிற்சி முகாமொன்று நேற்று இடம்பெற்றது. இந்த பயிற்சியை மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் டாக்டர் துர்கா அவர்கள் நடாத்தினார். 50 பேருக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முகாமின் இறுதியில் தாய்மார் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு முதலுதவிக்கான பொருட்கள் அடங்கிய பெட்டியொன்றும் (FIRST AID BOX)  பிரதேச இளைஞர்களது பாவனைக்கான விளையாட்டு உபகரணத் தொகுதியொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமதி விஜயவர்தனவும் கலந்து சிறப்பித்தார்.



No comments: