Monday, March 22, 2010

மலைகளில் குர்ஆன்

கல்வி சிந்தனை குழு: 'பூமியை நாம் (உங்களுக்குத்) தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் அமைக்கவில்லையா?' (குர்ஆன், 78:6-7)பூமி என்பது, அடிப்படைக் குறியீட்டுச் சொல்லாக உலகின் பல பல்கலைக்கழகங்களிலும் கருதப்பட்டு வருகின்றது.

மலைகளில் குர்ஆன் எனும் இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவர், அமெரிக்க ஆய்வாளரும் 30 கௌரவப் பட்டங்களைப் பெற்றவருமான பிரான்க் பிரஸ் ஆவார். அவர், அமெரிக்க தேசிய விஞ்ஞான அகாடெமியின் தலைவராக 1981 – 1993 வரை இருந்தார். அதற்கு முன்னர் அவர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு விஞ்ஞான ஆலோசகராகத் தொழிற்பட்டார்.
மலைகளில் குர்ஆன் எனும் அவரது நூல் குறிப்பிடுகின்றது: மலைகளுக்கு கீழ்மட்டப் பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகள் தரையில் ஆழமாகப் பதிந்துள்ளன. எனவே, மலைகளுக்கு, முளைகளைப் போன்ற வடிவமுள்ளது எனக் கூறும் இந்நூல், அது தொடர்பான வரைபுகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. அவ்வரைபுகள், மலைகள் எவ்வாறு அவற்றின் பாதையினூடாக முளைகளைப் போன்று பதிந்துள்ளன என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன. இது அல்குர்ஆன் கூறும் முறைக்கு முற்றிலும் உடன்படுவதாகவும் அமைந்துள்ளது. 

மலைகளுக்கு நிலக்கீழ் மட்டத்தில் ஆழமான பாதைகள் உள்ளன என்பதை நவீன பூகோள விஞ்ஞானங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தப் பாதைகள் சில நேரங்களில், அவற்றின் நிலமட்டத்தை விடவும் உயர்வை எட்டக் கூடும். எனவே, மலைகளை வர்ணிப்பதற்கு மிகவும் பொருத்தமான ஒரு சொல் முளைகள் என்பதாகும். ஏனெனில், பெரும்பாலான முளைகள் பூமிக்கடியில் மறைந்தே உள்ளன. 

இவ்வாறு மலைகளுக்கு நிலக்கீழ் மட்டத்தில் பாதைகள் உள்ளன என்ற கோட்பாடு, 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன என விஞ்ஞான வரலாறு தெரிவிக்கின்றது.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: 'உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காக (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். (உங்கள் போக்குவரத்துக்கு) நேரான வழிகளை நீங்கள் அறிவதற்காக(ப் பல) பாதைகளையும் ஆறுகளையும் அமைத்தான்' (குர்ஆன், 16:15)
எவ்வாறாயினும், நவீன பூகோள விஞ்ஞானம், அல்குர்ஆனின் கூற்றுக்களை சரியென உறுதிப்படுத்தியுள்ளன. 

மூலம்: சவூதி கெசட்
538736


http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=538797

No comments: