Monday, February 8, 2010

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு அங்கத்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் சந்திப்பு



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் கஹடோவிட ஓகொடபொல அங்கத்தவர்கள் ருஸ்தி ஹாஜியார் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களை அவரின் ஹொரகொல்ல வீட்டில் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றியும் கட்சியின் போக்கு பற்றியும் கலந்துரையாடியதாகத் தெரிய வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை முன்னாள் ஜனாதிபதி ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக வெளியாகியிருக்கின்ற செய்திபற்றி இக்குழுவினர் கேட்டதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி தான் இத.தேர்தலில் எந்த வேட்பாளருக்காகவும் பிரச்சாரம் செய்யப் போவதில்லை எனவும் தனது இந்தக் கரு;ததை தான் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஹடோவிடவுக்கு வருகை தருமாறு இக்குழுவனரால் விடக்கப்பட்ட அழைப்பை மிகவும் பெருமனதோடு ஏற்றுக் கொண்ட அவர் மிக விரைவில் வருகை தருவதாகவும் கூறியுள்ளார்.

கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். அதிகாரத்திலில்லாத நிலையிலும் தன்னை வந்து சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக முன்னாள் ஜனாதிபதி இக்குழுவினருக்கு நன்றி தெரிவித்ததாகவும் இத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: