Monday, February 8, 2010

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைப்பது முஸ்லிம்களின் பொறுப்பு - மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம்

 
 

ஜனாதிபதித் தெர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த பிரச்சாரக்கூட்டம் 2010.01.17 ஆம் திகதி    ஞாயிறு இரவு 7.30 மணியளவில் கஹட்டோவிட்ட கோழிக்கடை சந்தியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐ.தே.க. கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் சந்திர ராஜகருண முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹ மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் ஜே.வி.பி. கம்பஹ மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வருண தீப்தி ராஜபக்ஷ கொழும்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் முஜிபுரஹ்மான் வத்தளை நகர சபையின் பிரதித் தலைவர் நவுஷாட் அத்தனகல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் நிஸதார் மற்றும் பிரதேச சபை உறுப்பினாகள் கலந்து சிறப்பித்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் இந்த நாட்டுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநியாயங்கள் அரசாங்க அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் மேற் கொள்ளப்பட்டு வரும் ஊழல்கள் எதிர்க்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மீது மேற்கொள்ளப்பட்டு வரும் சேறு பூசும் நடவடிக்கைகள் பற்றி பேச்சாளர்கள் விரிவாக விளக்கமளித்தனர்.

மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் உரையாற்றுகையில் இராணுவத்தினரின் திறமையினால்தான் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது எனவும் உலகிலேயே சிறந்த இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தான் என்றும் புகழாரம் சூடிய அரசு இன்று ஜெனரல் சரத் பொன்சேகா ஊழல் செய்தவர் என்றம் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூப்பாடு போடுகின்றனர். முஸ்லிம்களுக்கு எந்த விதமான நன்மையையும் செய்யாத இந்த அரசாங்கத்தை எதிர்வரம் 26ஆம் திகதி தேர்தலில் தோற்கடித்து ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் முஸ்லிகள் மீது காட்டுகின்ற பாரபட்சம் சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அதான் சொல்வதில் கொண்டுவரப்பட்ட தடை வியாபார ரீதியாக முஸ்லிம்கள் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றமை பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் மார்க்க அடிப்டையில் சீருடை அணிவதற்கான தடை போன்ற முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்பினர் முஜிபுரஹ்மான் இந்த அரசாங்கம் இப்பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் இதனால் இவ்வரசாங்கத்தைத் தோற்கடிப்பதில் முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பை வழங்க வெண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த அரசுக்கு வாக்களிக் வேண்டும் என வாய்கிழிய கூச்சல் போட்டு வக்காளத்து வாங்குகின்ற பிரபல மவுலவி பல விதமான ஊழல்களில் ஈடுபட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பலநூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்த இக்கூட்டம் இரவு 11.00 மணி வரை நீடித்தது. கூட்டத்தை அத்தனகல்ல பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் கமால் அப்துல் நாஸர் தொகுத்து வழங்கினார்

No comments: