ஓகடபொளை வேயன்கொடை பஸ்சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கஹட்டோவிட பிரதான பாதையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இச்சேவை கஹட்டோவிடாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஓகடபொளை-திஹாரியினூடாக வெயான்கொடையைச் சென்றடையும். இச்சேவையை ஆரம்பிப்பதற்காக அயராது பாடுபட்ட
கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கிள் அங்கத்தவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஓகடப்பொளைக் கிளையின் அங்கத்தவர்களுக்கும் ஊர் மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இச்சேவை எமதூர் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பக்கத்து ஊரான ஓகடபொளைஇ உடுகொடை மற்றும் திஹாரிய ஆகிய ஊர்களுக்குச் செல்வதென்றாலும் முச்சக்கர வண்டியையே நாடவேண்டியுள்ளது. இச்சேவை மூலம் எமுதூர் மக்களின் பிரயாணச் சிரமம் பாரியளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லாஹ் இவர்களது பணியைப் பொருந்திக் கொள்வானாக!
1 comment:
அல்ஹம்துலில்லாஹ்....
இந்த முயற்சியை முன்னெடுத்தவர்களுக்கும் அதன் வெற்றிக்குப் பங்களித்தவர்களுக்கும் அல்லாஹ் நற்கூலி நல்குவானாக...
ஆமீன்.
Post a Comment