Thursday, February 11, 2010

ஊரில் அதிகரித்து வரும் தீமைகள்




நாளுக்கு நாள் ஊரில் மார்க்க விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் தீய செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதோடு அவைபற்றி கரிசனை செலுத்துகின்றோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தள்ளது.

இவ்வாறு மலிந்து கிடக்கின்ற தீமைகளில் லொத்தர் டிக்கட் வாங்குகின்ற பழக்கமும் ஒன்று. இப்போதெல்லாம் லொத்தர் சீட்டு விற்கின்றவர்கள் பகிரங்கமாகவே குறிப்பிட்ட வீடுகளுக்கு முன்னால் சென்று தமது வாடிக்கையாளரை அழைத்து விற்பனையில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகியுள்ளது.


இதில் வேடிக்கை என்னவெனில் படித்த பொறுப்பு வாய்ந்த சிலரும் இப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக சிலர் வேதனையுடன் பேசிக்கொள்கின்றனர். அத்தோடு ஆண்கள் மாத்திரமன்றி தலையை முக்காடிட்டு மறைத்த நிலையில் பெண்களும் லொத்தர் மீது நம்பிக்கை வைத்து அவற்றை வாங்குகின்ற காட்சியையும் காண முடிகின்றது.


ஏற்கனவே ஒருசிலர் எமது ஊரில் லொத்தர் மூலம் லட்சாதிபதிகளாக மாறியதால் மற்றவர்களுக்கும் நப்பாசை பிடித்து விட்டதோ என்னவோ?
ஆனால் ………………………
நமது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் நடந்து கொள்வது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து நடப்பதே மிகச்சரியானது.

No comments: