Monday, February 8, 2010

பல நாட்களாக குப்பை அள்ளப்படாததால் வீதியெங்கும் துர் நாற்றம்



அத்தனகலை பிரதேச சபை மூலம் குப்பை அள்ளத் தொடங்கியதிலிருந்து ஊர் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் உள்ள எல்லா குப்பைகளையும் வீதியருகே போட ஆரம்பித்தனர். வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே குப்பை அள்ளப் படுவதால் உரிய நாட்களில் மாத்திரம் குப்பைகளை குப்பை வண்டிக்கு கொடுக்குமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டும் மக்கள் பொறுப்பில்லாமல் வீதியிலே குப்பைகளை வீசி வருவது கவலைக்குரியதாகும்.

சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்ற போதும் மக்கள் வெளியில் குப்பைகளை வீசி வருவதாலும் குப்பைத் தொட்டியில் போடப்படுகின்ற குப்பைகளை நாய் பூனை போன்ற மிருகங்கள் கிளறுவதாலும் வீதியிலே துர்நாற்றம் வீசுவதோடு அருவருப்பாகவும் உள்ளது. புல முறை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என கிராம மக்கள் கவலைப்படுகின்றனர்.

மற்றவரை குறை கூறுவதை விட்டு விட்டு ஊரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது அனைவரதும் பொறுப்பாகும்.
குடந்த பல நாட்களாக குப்பை அள்ளப்படாததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

தயவு செய்து பொறுப்பு வாய்ந்தவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

No comments: