Tuesday, February 9, 2010

மலர் மன்னனின் சவால்!

இஸ்லாம், முஸ்லிம் போன்ற பெயர்கள் மீது அவருக்கு அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிடிவாதமாக 'முகமதியம்' 'முகமதியர்' என்றுதான் குறிப்பிடுகிறார் மலர் மன்னன்.

"Social Justice in Islam" என்ற நூலை அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜான் ஹார்டி (John B. Hardie) அவரது முன்னுரையில் எழுதுகிறார்:

"The name of the faith was significant; Islam means committing oneself to God, and those who do so are Muslims. The terms Muhammedanism and Muhammedan are frequently used in the West, but are not popular among Muslims themselves, since they hold, and rightly, that they are not worshippers of Muhammad, who was simply the Messenger or Apostle of Allah."

'இந்த மார்க்கத்தின் பெயர் முக்கியமானதொரு விஷயம். இறைவனுக்குக் கடமைப் பட்டவராக ஒருவர் தம்மை ஆக்கிக் கொள்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். அவ்வாறு செய்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். 'முகமதியம்' 'முகமதியர்' போன்ற சொற்கள் மேற்கத்தியர்களால் அதிகமாக பயன்படுத்தப் பட்டாலும் முஸ்லிம்களிடையே இவற்றிற்கு ஆதரவு இல்லை. அவர்கள் முஹம்மதை வணங்குபவர்களல்ல என்பதால் அவர்கள் சொல்வது சரிதான். முஹம்மது ஒரு இறைத்தூதர்தானே தவிர வணங்கப் படுபவர் அல்லர்.'

இதை மூன்று வாரங்களுக்கு முன்பு 'திண்ணை'யில் எழுதியிருந்தேன்.

சென்ற வார திண்ணையில் மலர் மன்னன் இதற்கு பதிலளித்தபோது இப்படி ஒரு சவாலையும் வைத்திருந்தார்.

தங்கள் இறைத் தூதரை அவர்கள் வணங்குவதில்லை என்று சொல்வது ஒரு சம்பிரதாயமே ஆகும். வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல' என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் "ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?

மலர் மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த வார திண்ணையில் வந்திருக்கும் பதில்கள்:

இப்னு பஷீர்

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான நேசத்திற்கு உரியவர்கள். வணங்கப் படுபவர்கள் அல்லர். 'வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே' என்பதே இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை!

எனவே முஸ்லிம்களாகிய நாங்கள், எங்கள் இறைத்தூதரை மதிப்போம், அவரது வழிமுறைகளை பின்பற்றுவோம். ஆனால் அவரை வணங்க மாட்டோம். அவர் எங்கள் தலைவர், வணங்கப் படுபவர் அல்லர்.

அபூ முஹை

நான் பின்பற்றும் இஸ்லாத்தின் இறைத்தூதராகிய முஹம்மத் நபியை நான் வணங்கவில்லை! வணங்கவும் மாட்டேன்! என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

நான் மட்டுமல்ல, எந்த முஸ்லிமும் இறைத்தூதர் முஹம்மத் நபியை வணங்கவில்லை, வணங்க மாட்டார்கள், வணங்கவும் கூடாது. என்றும் உரக்கச் சொல்லிக்கொள்கிறேன்.

''ஹிட் லிஸ்டில்'' பதிவு செய்ய மலர் மன்னன் சிபாரிசு செய்யலாம்.

நன்றி!

இறை நேசன்

எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல. உலகைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் எவனோ அவன் மட்டுமே எங்கள் வணக்கத்திற்குரியவன்.

நான் அறிவித்து விட்டேன். எனது பெயர் "ஜிகாதிகளின்" ஹிட் லிஸ்டில் வரும் பொழுது திரு. மலர்மன்னன் மறக்காமல் எனக்குத் தெரியப்படுத்தவும்.

நன்றி.

துல் பிகர்

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், முஹம்மது நபி அவர்களை நாங்கள் வணங்க வேண்டும் என்றா? அப்படி நாங்கள் செய்யாததை செய்ததாக சொன்னால் உங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஜிஹாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் நாங்கள் சேரக் கூடாது என்பது தானா?

வேற வேலையே இல்லையா ஐயா, உங்களுக்கு என்று தான் கேட்க தோன்றுகிறது.

நல்லடியார்

நபிமார்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்பதையே நம்புபவர்களே முஸ்லிம்கள்! இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றும் முஸ்லிம்ககளின் பூர்வீக அடையாளத்தைச் சிதைப்பதாக இருப்பதாலேயே, முஹம்மதியர் என்ற சொற்பிரயோகம் முஸ்லிம்களைக் முழுமையாக அடையாளப்படுத்தாது என்பதே வஹ்ஹாபி மற்றும் இப்னு பஷீரின் வாதம்!

வஹ்ஹாபி

"எங்கள் இறைத் தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்" என்று யாராவது ஒரு முஸ்லிம் கூறினால் அவரை ஜிஹாதிகளிடம் மலர் மன்னன் போட்டுக் கொடுத்து விடுவார் என்று சற்றே அச்சம் ஏற்பட்டாலும் உயிருக்கு அஞ்சி உண்மை சொல்லாமல் இருக்க வேண்டாம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்:

"எங்கள் இறைத்தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்"

மேலும் சொல்கிறேன்: "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே!"

மலர் மன்னன் திருப்தி அடைந்தாரா என்பது தெரியவில்லை!

No comments: