26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கஹடோவிட மக்கள் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் வாக்களித்தனர். தேர்தல் தினத்தில் எந்த விதமான குழப்ப நிலைகளும் ஏற்படவில்லை. பதிவு செய்யப்பட்டடிருந்த 1821 வாக்குகளில் 1339 வாக்குகள் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு வாக்குகள் அளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதே வேளை தேர்தல் முடிவுகளில் பெரும்பாலானவை வெளிவந்திருக்கின்ற இப்போதைய நிலையில் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி தெளிவாக இருப்பதாகத் தெரிகின்றது.
No comments:
Post a Comment