அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் 2010ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளை மலிவு விலையில் விற்பனை செய்யும் வேலைத் திட்டம் 2009.12.25 ஆம் திகதி பி.ப. 4.00 மணியளவல் வெகு விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 26 மற்றும் 27 ஆம் திகதிகளிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு 28ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்; பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பத்ரியா நலன்புரிச்சங்க அங்கத்தவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் மூலம் ஊர் மக்கள் பெரு நன்மை அடைந்துள்ளனர். அப்பியாசக் கொப்பிகள் எங்கும் இல்லாத அளவு மலிவான விலையில் விற்கப்படுவதோடு பாடசாலையின் வண்ணப் புகைப்பாடங்களுடன் காணப்படுவத விசேட அம்சமாகும்.
புhடசாலை மாணவர்களுக்குத் தேவையான ஏனைய உபகரணங்களும் புத்தகப் பை மற்றும் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது வசதியானக உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். 28ஆம் திகதி இரவு 10.00 மணியுடன் நிறைவு பெறவுள்ள இந்நிகழ்ச்சிக்குப் பின்னரும் பாடசாலையில் தமக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டள்ளது.
மேலும் ஒரேயடியாக முழுப்பணத்தையும் செலுத்தி அப்பியாசக் கொப்பிகளை வாங்க முடியாதளவு பொருளாதார வசதி அற்றவர்களுக்கு கடன் அடிப்படையிலும் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment