Monday, February 8, 2010

கஹட்டோவிட இளைஞர்களிடையே பரவி வரும் காதல் நோய்.

இன்றைய இளைஞர்களை ஆட்கொள்ளும் பயங்கர நோய்களில் காதல் நோயும் ஒன்றாகும். இந்நோய் நமதூர் இளைஞர்களிடமும் மிக வேகமாக பரவி வருவது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயமாகும். பல்வேறு மார்க்க நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் காணப்படும் ஒரு ஆண்மிக சூழல் உள்ள எமதூரில் இவ்வாறான மோசமான நோய் தொற்றிய இளைஞர்கள் அதிகரித்து வருவது ஊரின் எதிர்காலத்தில் ஆரோக்கியமான இளைஞர்;கள் உருவாவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஊரில் உள்ள இளைஞர்களில் 85%இளைஞர்கள் இக்காதல் நோயில் வீழ்ந்துள்ளதாக அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குறிய தகுந்த சிகிச்சையை வழங்காவிட்டால் இன்னும் மோசமான விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.

இளைஞர்களை சரியான பாதையில் வழி நடாத்துவது பெற்றேர்கள், அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பள்ளிவாசல்கள், மார்க்க நிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரப்பினதும் கடமையும் தட்டிக் கழிக்க முடியாத பொறுப்புமாகும்.

எனவே இதுவிடயத்தில் சிறந்த ஒரு முடிவை அனைத்துத் தரப்பும் எடுத்து எமது ஊரையும் இளைஞர்களையும் சரியான பாதையில் நடாத்தக் கூடிய வழிவகைகளை இத்தளத்தினூடாக கருத்துப்பரிமாற்றம் செய்யலாம் என நினைக்கின்றேன். எனவே உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதனூடாகப் பரிமாரிக் கொள்ளவும்.

2 comments:

Fathima said...

ஆழமான நட்பின் வெளிப்பாடு
ஆழமான நட்பின் வெளிப்பாடு அமைதியான இரவு.. சில்லேன்ற காற்று.. அலைகளின் தாளம்.. படகு மறைவில் காதல் ஜோடிகள்.. இருவர் மட்டும் வெட்டவெளில்.. அவன் தோளில் அவள் தலை சாய்ந்து விசும்பி கொண்டு இருக்கிறாள்.. சமுகம்...

Fathima said...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பில் மதுரையில் நேற்று (7-11-2010) ஜனவரி 4 போராட்டம் விளக்கப்ப பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு ”பாபர் மஸ்ஜித் வழக்கு சட்டம் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.