இந்த “ஆங்கிலம்” வலைத்தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றி சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். இது பாடசாலைகளிலோ, பகுதி நேர வகுப்புகளிலோ, புத்தகங்களிலோ நீங்கள் ஆங்கிலம் கற்றதைப் போன்றல்லாமல் இந்த "ஆங்கிலம்" தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு சற்று வேறுப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
வேறுப்பட்டிருப்பதற்கான காரணம்
எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்கியத்தைப் பாருங்கள்
I – நான்
Went – போனேன்
to market - சந்தைக்கு
I went to market
நான் போனேன் சந்தைக்கு.
என்று அப்படியே ஆங்கில மொழி நடைக்கு ஏற்றாற் போல் தமிழாக்கம் செய்துள்ளோம். இவ்வாறு தமிழாக்கம் செய்துள்ளதன் நோக்கம் எவரும் இலகுவாக விளங்கி கற்கக்கூடியதாக இருக்கும் என்பதே. அதேவேளை ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்குமான தமிழ் அர்த்ததையும் எளிதாக புரிந்துக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்று நினைக்கின்றோம்.
தவிர இவ்வாறுதான் அங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. அநேகமாக வேற்று மொழியை தமது தாய் மொழிக்கு மொழிமாற்றுபவர்கள் தமது மொழி நடைக்கேற்ப கலைச் சொல்லாகவே மொழி மாற்ற விரும்புகின்றனர். அவ்வாறு செய்வதாவது தமது மொழியின் தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகும். அது அம்மொழியின் சிறப்பிற்கு வழிவகுக்கும் என்பது உண்மை. இருப்பினும் ஆங்கிலத்தை தமிழ் கலைச்சொற்களாக ஆக்க விரும்பும் நாம் முதலில் ஆங்கிலத்திற்கான சரியான தமிழ் அர்த்தங்களை விளங்கிக் கற்றுத் தெளிவது சாலச்சிறந்தது அல்லவா?
ஆங்கில நடைக்கு ஏற்ப அப்படியே இடம் மாறாமல் தமிழாக்கம் செய்வது செயற்கையான தமிழாக்கமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் இலகுவாக ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதையே முதன்மைப் படுத்தியுள்ளோம் என்பதை கவனத்தில் கொள்க.
உலகத் தமிழர் பேச்சு வழக்கு
தவிர உலகத் தமிழர்களான நாம் நமது பேச்சு வழக்கு வெவ்வேறு விதமாகவும் வட்டார ரீதியாகவும் வேறுப்பட்டே உள்ளது.
உதாரணம்:
Did you go to market?
நீ சந்தைக்கு போனாயா? - எழுத்துத்தமிழ் வழக்கு
நீ சந்தைக்கு போனியா? - தமிழக/கொழும்பு பேச்சு வழக்கு
சந்தைக்கு போன நீயா? - யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு.
நீ மார்க்கெட் போனாயா? - ஆங்கிலம் இடைச்செருகி பேசும் "தமிங்கில" வழக்கு.
எனவே ஒவ்வொரு வட்டார வழக்குக்கும் ஏற்ப இங்கே தமிழ் மொழிப்பெயர்த்து ஆங்கிலம் கற்பிப்பது என்பதும் பொருத்தப்பாடாக இருக்காது.
Did you go to market?
நீ போனாயா சந்தைக்கு?
என ஆங்கில நடைக்கேற்ப தமிழ் சொற்களை அமைத்து பயிற்சி செய்வதே இலகுவாக ஆங்கிலம் கற்க உதவும் என நாம் நம்புகின்றோம். மேலும் முடிந்தவரையில் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தை விளங்கிக் கற்றால் காலப்போக்கில் அவரவர் தத்தமதுப் பேச்சு வழக்குடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் அல்லவா?
எமது ஆங்கில வகுப்பில்
எமது ஆங்கில வகுப்பிற்கு "HE English Institute" வருகைத் தரும் மாணவர்களுக்கும் ஆரம்பத்தில் இவ்வாறான ஒரு குழப்பம் இருந்தது. சிலர் தமிழை பிழையாக எழுதியுள்ளதாகவும், செயற்கையான மொழிமாற்றமாக இருப்பதாகவும் கூறினர். ஆனால் அவர்களே இம்மொழிமாற்றம் செயற்கையான மொழிமாற்றம் போல் தோன்றினாலும், ஆங்கிலச் சொற்களிற்கான தமிழ் அர்த்தங்களை விளங்கிக் கற்பதற்கு மிக இலகுவாக இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே அதே முறையிலேயே இவ்வலைத்தளத்திலும் தமிழாக்கம் செய்துள்ளோம்.
இன்றைய காலக் கட்டத்தில் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமலேயே ஆங்கிலம் கலந்து பேசுவோரே அதிகம். இந்த மோகம் தாய் மொழிப் பற்றை சிதைத்து விடுமோ என்று பலர் அச்சம் கொள்கின்றனர். அதனால் சிலர் ஆங்கில மொழி எதிர்ப்பாளர்களாகவும் எழுந்துள்ளனர்.
ஆங்கிலக் கல்வி
இன்றைய உலகில் அறிவியல் வளர்ச்சிகள், தொழில் நுட்பத் தகவல்கள் என்று மட்டுமல்லாமல் உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன், அதனைக் கற்க வேண்டிய அவசியமும் நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய பாடசாலை ஆங்கிலக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தமிழகப் பேராசிரியர் சரசுவதி அவர்கள் கூறியதை ஆறாம்திணை தளத்தில் காணக்கிடைத்தது. அத்தளத்தின் எழுத்துரு சிக்கலாக இருப்பதால் அதில் சிலப் பகுதிகளை ஆங்கிலம் உதவி பக்கம் இட்டுள்ளோம். நீங்களும் பார்க்கலாம்.
தமிழர்களான நாம் எமது மனதில் தோன்றும் எண்ணத்தை அல்லது கருத்தை அப்படியே வேற்று ஒரு மொழியினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், அதையே ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலேயர் ஒருவருக்கு தெரிவிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு தானே ஆங்கில மொழி அறிவு அவசியமாகிறது. (ஆங்கிலம் அறிவியல் மொழியாக வளர்ந்துள்ளது வேறு விடயம்) நாம் எப்படி நமது தாய் மொழி தமிழில் சிந்தித்து தமிழில் பேச, எழுத முடிகிறதோ அதேப்போன்று ஆங்கிலத்திலும் பேச, எழுதக் கூடிய ஒரு பாடத் திட்டம் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்?
அவ்வாறான ஒரு இலகு வழி ஆங்கில பாடத்திட்டம் நமது பாடசாலைகளில் உருவாக்கப்பட்டால் நமது சமுதாயம் மேலும் பல வளர்ச்சிப் படிகளை எளிதாக எட்டலாம் அல்லவா!
இங்கே இன்னும் ஒன்றையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர்கள் (ஹொங்கொங்) பலரது கருத்து ஆங்கிலத்தை அப்படியே தமிழில் மொழிமாற்ற முடியாது என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் (Tamil-English Interpreter) மொழிப்பெயர்ப்பாளராக இருக்கும் பலருக்கு தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான். தமிழ் தெரியா தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்கள்!
எம்மைப்பொருத்த மட்டில் எந்த ஒரு ஆங்கில வார்த்தையையும் எவ்வித பொருள் சிதைவும் இல்லாமல் தமிழில் மொழிமாற்றலாம்; முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்றால்.
பாதித் தமிழை மென்று, மீதி தமிழை விழுங்கி, சொதப்பி ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசுவதைத் தவிர்க்க, முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்குமான தமிழ் சொற்களையும் அறிந்து வைத்துக்கொள்ளலாம். தமிழை தமிழாகப் பேசுங்கள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசுங்கள். ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இல்லையெனில் காலப்போக்கில் நீங்களே அதை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கலாம்.
இங்கே இந்த "ஆங்கிலம்" வளைத்தள உருவாக்கமும் தமிழ், தமிழர் எனும் பற்றினாலேயே என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
"கிரமர் பெட்டர்ன்" களில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் பின் ஒவ்வொரு பாடங்களாக விரிவாகக் கற்பிக்கப்படும். அப்போது அதனதன் இலக்கண விதி முறைகளையும் பயன்பாட்டையும் விரிவாகக் கற்றுக் கொள்ளலாம்.

தாய்மொழி தமிழும் ஆங்கிலமும்
இன்றைய காலக் கட்டத்தில் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமலேயே ஆங்கிலம் கலந்து பேசுவோரே அதிகம். இந்த மோகம் தாய் மொழிப் பற்றை சிதைத்து விடுமோ என்று பலர் அச்சம் கொள்கின்றனர். அதனால் சிலர் ஆங்கில மொழி எதிர்ப்பாளர்களாகவும் எழுந்துள்ளனர்.
என்னைப் பொறுத்தமட்டில் பாய்ந்தோடும் நதிக்கு பள்ளம் மேடு தடையாக இருக்காது. எத்தனை அணைக் கட்டினாலும் நதி நீர் நிரம்பி வழிந்தோடவேச் செய்யும். அதேப் போல் ஆங்கில மொழி அறிவியல் மொழியாக வளர்ந்துள்ள இக்காலக் கட்டத்தில் அதன் அவசியம் அறிந்தவர்கள் அதை நாடிச் செல்லவே செய்வர். அதைத் தடுக்க முயல்வதும் நடைமுறைச் சாத்தியமற்றது.
உலகின் ஏனையப் பிறமொழிகள் போல் அல்லாமல் ஆங்கில மொழிக்கென்று ஒரு சிறப்பும் காலத்தின் அவசியத் தேவையும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தமட்டில் உலகில் தமிழினத்தின் தலை நிமிர்விற்கு இன்றையக் காலக்கட்டத்தில் ஆங்கில மொழியறிவு அவசியம் என்பதில் இரண்டுக் கருத்துக்கள் கிடையாது.
அதேவேளை எக்காரணம் கொண்டும் எம் தாய்மொழி எம்மொழிக்கும் சிரம் தாழ்த்திவிடவும் கூடாது. தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய்மொழிப் பற்று அற்றுப்போய்விடக் கூடாது.
இதற்கு என்ன செய்யலாம்?
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்கலாம்.
முடிந்தவரையில் ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் விளங்கி கற்கலாம். இதுவே ஆங்கிலமும் கற்று, ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொற்களையும் கற்று தாய்மொழியை காப்பதற்கான வழி. குறைந்தப் பட்சம் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமலேயே பேசுவதை விட, பேசுவது தமிழ் அல்லது ஆங்கிலம் என்பதையாவது விளங்கிக்கொண்டுப் பேசலாம் அல்லவா?
கவலைக்குறிய விடயம் என்னவென்றால் ஆங்கிலம் கற்பிக்கும் பல ஆசிரியர்களுக்கு தாய் மொழி தமிழ் சரியாகத் தெரியாது என்பதே. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களோ அதன் அர்த்தமோ தெரிவதில்லை. பிறகு எப்படி ஆங்கில மொழியினை தமிழில் விளங்கப்படுத்த முடியும்? ஆங்கில வழிக் கல்வியாகவே கற்றாலும் அதற்கான அர்த்தங்கள் தம் தாய் மொழியில் அறியாதிருக்கும் வரை அறியாமையே மேலோங்கி நிற்கும். ஆங்கில வழிக் கல்வியில் உயர் தரம் கற்கும் மாணவர்களும் ஆங்கிலம் பேசுவதில் சிறமப்படுகின்றார்கள் என்றால் இதுவே பிரதானக் காரணமாகின்றது. இதற்கான ஒரே தீர்வு முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பதே.
ஆங்கில உச்சரிப்புக்களை சரியாகக் கற்பதற்கு வேண்டுமானால் தாய் மொழி ஆங்கிலேயர்களின் உச்சரிப்புக்களை பின்பற்றலாம்.
தமிங்கிலம் தவிர்க்கலாம்
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்றோமானால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அறிந்துக்கொண்டோமானால் தமிங்கிலத்தை தவிர்ப்பதற்கும் இவை வாய்ப்பாகலாம். இதுவே பரந்துப்பட்ட அளவில் அரசக் கல்வித்திட்டமாக பரிணமிக்குமானால் ஓரளவேனும் தமிங்கிலத்தைத் தவிர்ப்பதற்கும் சாத்தியமாகும் என்று நம்புகிறோம்.
ஆங்கிலக் கல்வி
இன்றைய உலகில் அறிவியல் வளர்ச்சிகள், தொழில் நுட்பத் தகவல்கள் என்று மட்டுமல்லாமல் உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன், அதனைக் கற்க வேண்டிய அவசியமும் நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய பாடசாலை ஆங்கிலக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தமிழகப் பேராசிரியர் சரசுவதி அவர்கள் கூறியதை ஆறாம்திணை தளத்தில் காணக்கிடைத்தது. அத்தளத்தின் எழுத்துரு சிக்கலாக இருப்பதால் அதில் சிலப் பகுதிகளை ஆங்கிலம் உதவி பக்கம் இட்டுள்ளோம். நீங்களும் பார்க்கலாம்.
தமிழர்களான நாம் எமது மனதில் தோன்றும் எண்ணத்தை அல்லது கருத்தை அப்படியே வேற்று ஒரு மொழியினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், அதையே ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலேயர் ஒருவருக்கு தெரிவிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு தானே ஆங்கில மொழி அறிவு அவசியமாகிறது. (ஆங்கிலம் அறிவியல் மொழியாக வளர்ந்துள்ளது வேறு விடயம்) நாம் எப்படி நமது தாய் மொழி தமிழில் சிந்தித்து தமிழில் பேச, எழுத முடிகிறதோ அதேப்போன்று ஆங்கிலத்திலும் பேச, எழுதக் கூடிய ஒரு பாடத் திட்டம் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்?
அவ்வாறான ஒரு இலகு வழி ஆங்கில பாடத்திட்டம் நமது பாடசாலைகளில் உருவாக்கப்பட்டால் நமது சமுதாயம் மேலும் பல வளர்ச்சிப் படிகளை எளிதாக எட்டலாம் அல்லவா!
இங்கே இன்னும் ஒன்றையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர்கள் (ஹொங்கொங்) பலரது கருத்து ஆங்கிலத்தை அப்படியே தமிழில் மொழிமாற்ற முடியாது என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் (Tamil-English Interpreter) மொழிப்பெயர்ப்பாளராக இருக்கும் பலருக்கு தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான். தமிழ் தெரியா தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்கள்!
எம்மைப்பொருத்த மட்டில் எந்த ஒரு ஆங்கில வார்த்தையையும் எவ்வித பொருள் சிதைவும் இல்லாமல் தமிழில் மொழிமாற்றலாம்; முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்றால்.
பாதித் தமிழை மென்று, மீதி தமிழை விழுங்கி, சொதப்பி ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசுவதைத் தவிர்க்க, முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்குமான தமிழ் சொற்களையும் அறிந்து வைத்துக்கொள்ளலாம். தமிழை தமிழாகப் பேசுங்கள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசுங்கள். ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இல்லையெனில் காலப்போக்கில் நீங்களே அதை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கலாம்.
ஆங்கில மொழி இலத்தீன் கிரேக்க மொழிகளில் இருந்து மட்டுமன்றி பல மொழி சொற்களையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது என்பதைப் பலரும் அறிவோம். ஆனாலும் ஆங்கிலம் இன்று உலக மொழி தகுதியைப் பெற்றுள்ளதற்குக் காரணம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழிப் பற்றாளர்களிடம் தோன்றிய மொழிப் பற்றேயாகும். தவிர ஆங்கிலத்தில் புதிதுப் புதிதாகத் தோன்றும் புதியச் சொற்கள் பல ஆங்கில வேர் சொற்களிலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றது. கீழுள்ள கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள்.
ஆங்கில மொழி வரலாறு
அமெரிக்க ஆங்கில வரலாறு
சகல இலக்கிய வளமும் சொல் வளமும் கொண்ட எம் தமிழ் மொழியின் மூல வேர் சொற்களிலிருந்து எத்தனை சொற்கள் வேண்டுமானாலும் மிக எளிதாக நாம் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அது அனைத்து மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டுச் செல்லல் அவ்வளவு எளிதான விடயம் அல்ல என்பதையும் நாம் அறிவோம். தமிழ் பற்றுடன் தன்னார்வ பிரிவுகளாகவும் குழுக்களாகவும் கலைச் சொல்லாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பலரை இணையத்திலும் காணக்கிடைக்கிறது. இது வரவேற்கத்தக்க விடயம். அனாலும் இதன் முக்கியத்துவமும் முழுமையும் அனைத்து தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டுமாயின் அது தன்னாட்சி இறைமையுடன் கூடிய ஓர் தமிழர் தேசம் மலர்வதில் மட்டுமே சாத்தியமானது என்பதை உறுதியாக நம்புகின்றோம்.
இங்கே இந்த "ஆங்கிலம்" வளைத்தள உருவாக்கமும் தமிழ், தமிழர் எனும் பற்றினாலேயே என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
எமது பாடத்திட்டம்
சாதாரணமாக நாம் தினமும் தமிழில் பயன்படுத்தும் ஒரு சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். "நான் கடைக்குப் போகிறேன், நான் சாப்பிடுகிறேன், நான் படிக்கிறேன்" என நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக "நான் படிக்கிறேன்." எனும் ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டால், இந்த ஒரு வார்த்தையை எத்தனையெத்தனை விதமாக கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிப் பேசுகின்றோம்?
நான் படிக்கிறேன்.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன்.
நான் படித்தேன்.

நான் படிப்பேன்.
நான் படிக்க வேண்டும்.
நான் படிக்கவே வேண்டும்
நான் படிக்க வேண்டும்.
நான் படிக்கவே வேண்டும்
எனக்கு படிக்க முடியும்
என இன்னுமின்னும் எத்தனையோ விதமாக மாற்றி பேசுகின்றோம், எழுதுகின்றோம் அல்லவா! இவ்வாறு நாம் தினமும் பேசும் எழுதும் மொழியைத்தானே இலக்கண விதிமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது.

எனவே "ஆங்கில இலக்கணம்" என்று ஆரம்பத்திலேயே மிரளாமல், சாதாரணமாக நாம் அன்றாடம் நமது வாழ்வில் பேசும் ஒரு தமிழ் வார்த்தையை எவ்வாறு இடத்திற்கு ஏற்ப மாற்றிப் பேசுகின்றோமோ அதேப்போன்றே, ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்து அதை 73 வார்த்தைகளாக மாற்றி இந்த ஆங்கில பாடப் பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தான் ஆங்கில இலக்கணம் என்றும் கூறப்படுகின்றது. இதனை இங்கே "Grammar Patterns" களாக வழங்குகின்றோம். பொருள் சிதைவற்ற சிறப்பான பேச்சிற்கு ஆங்கில இலக்கணம் அவசியம் என்றப் போதினில், ஆங்கில இலக்கண விதிமுறைகளை எளிதாக விளங்கிக் கற்பதற்கு முதலில் "Grammar Patterns" களைப் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். இந்த "கிரமர் பெட்டர்ன்களை" மனப்பாடம் செய்துக் கொண்டீர்களானால், நீங்கள் ஒரு பாலர் வகுப்பு மாணவர் என்றாலும் சரி, பட்டதாரி மாணவர் என்றாலும் சரி, எவரும் எளிதாக இந்த ஆங்கில பாடப் பயிற்சியை தொடர முடியும்.
இது மிகவும் எளிதான ஒரு பாடப் பயிற்சித் திட்டம்.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த மொழியானாலும் "பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப் பட்டுள்ளதே தவிர, இலக்கண விதிகளை வகுத்துவிட்டு எந்த ஒரு மொழியும் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை."
எனவே அச்சமின்றி கூச்சமின்றி சத்தமாக பேசிப் பழகுங்கள். உங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் எமது ஒவ்வொரு பாடங்களின் போதும் வழங்கப்படும் வீட்டுப் பயிற்சிகளை முறையாகப் பயின்றாலே போதுமானது.
முதலில் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3, Grammar Patterns 4, Grammar Patterns 5, Grammar Patterns 6 இவற்றைப் பயிற்சி செய்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இலக்கண விதிகளைக் கற்கலாம்.இதை தவிர வேறு விதமான கிரமர் பெட்டன்களும் சில இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.
"கிரமர் பெட்டர்ன்" களில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் பின் ஒவ்வொரு பாடங்களாக விரிவாகக் கற்பிக்கப்படும். அப்போது அதனதன் இலக்கண விதி முறைகளையும் பயன்பாட்டையும் விரிவாகக் கற்றுக் கொள்ளலாம்.
பாடங்கள் இலக்க வரிசையில் வழங்கப்படுவதால் அவற்றை நீங்கள் இலக்க வரிசையிலேயே தொடரலாம்.
எமது இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். மாற்று கருத்து இருந்தால் அதனையும் கூறுங்கள்.
நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண்
தொடர்புகளுக்கு: arunhk.info@gmail.c
நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண்
தொடர்புகளுக்கு: arunhk.info@gmail.c
No comments:
Post a Comment