வாசகர்களின் வினாக்களுக்கு குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் சட்டத்தீர்ப்புகள், சமகால அறிஞர்களின் விளக்கங்களின் பின்னணியில் பரந்த மனப்பான்மையுடன் அவற்றை அணுகி இந்த இணையத்தளம் வழங்க தயராக உள்ளது.
Thursday, February 11, 2010
குவைத் மாணவர் தொழிலாளர் சங்கத்தின் புலமைப் பரிசில்
கஹடோவிடாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கல்வியைத் தொடர்வதற்காக உதவிப் பணமாக மாதாந்தம் ஒரு தொகையை வழங்க குவைத் மாணவர் தொழிலாளர் சங்கம் முன்வந்துள்ளது. இவர்களின் இம்முயற்சி கல்வி கற்கின்ற ஏனைய மாணவர்களுக்கும் ஒரு உற்சாகப்படுத்தலாக உள்ளதோடு எமதூரிலுள்ள வரிய மாணவர்களின் கல்விக்கான ஒரு உந்துசக்தியாக இருப்பதாகவும் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
இவர்களின் இம்முயற்சி விரிவுபடுத்தப்பட்டு இன்னும் அதிகமான மாணவர்கள் இதனுள் உள்வாங்கப்பட வேண்டுமென்பது அனேகரின் எதிர்;பார்க்கையாகும். எமது ஊரின் வசதிபடைத்தவர்கள், புத்திஜீவிகள், இயக்கங்கள், ஏனைய சமூகசேவை அமைப்புக்கள் இவர்களின் இம்முயட்சிக்கு அதரவு நல்குவது தொடர்ந்து இவர்களால் இதுபோன்ற சேவைகள் முன்னேடுக்கப்பட வழிகோளும்.
மேலும் தற்போது கஹட்டோவிடாவில் இயங்கிவரும் தபால் நிலையக் கட்டிடம் இம்மாணவர் ஒன்றியத்தின் முயற்சியின் விளைவாக கட்டிக் கொடுக்கப்பட்டது என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
அல்லாஹ் இவர்களின் முயற்சிகளைப் பொருந்திக் கொள்வானாக! உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை கீழே குறிப்பிடுவதன் மூலம் இவர்களின் முயற்சிக்கு ஆதரவு நல்குங்கள்.
Labels:
இஸ்லாம்,
ஊர் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment