கண்களில் வெள்ளை படர்தல் நோய் (CATARACT) உள்ளவர்களுக்கான பரிசோதனை நடாத்தி இலவசமாக முழுச்சிகிச்சை அளிப்பதற்கான முகாமொன்றை கஹடோவிட ஜூம்ஆ மஸ்ஜித் (தௌஹீத் பள்ளி) நிர்வாகம் ஏற்பாடு செய்தள்ளனர்.
அரசாங்க வைத்தியசாலைகளில் இச்சிகிச்சையை மேற்கொள்வதாயின் சுமார் ரூ.10000.00 முதல் ரூ.20000.00 வரை செலவு ஏற்படுவதாகவும் தனியார் வைத்தியசாலைகளில் இதற்கான செலவு சுமார் ரூ. 20000.00 முதல் ரூ. 80000.00 வரை எனவும் கூறப்படுகின்றது.
2010 பெப்ரவரி 16 ஆம் திகதி பி.ப. 3.00 மணி முதல் 5.30 வரை கஹடோவிட ஜூம்ஆ மஸ்ஜிதில் நடைபெறவுள்ள இந்த முகாமில் பாகிஸ்தானிலிருந்து வருகை தரும் வைத்தியர்கள் இலவசமாக பரிசோதனை நடாத்தவிருப்பதுடன் சிகிச்சை அவசியமான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த முகாம் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அணுசரணையுடன் நடைபெறுகின்றது.
இந்த சிகிச்சை தேவைப்படுகின்ற அனைவரும் அன்றைய தினம் பரிசோதனைக்காக சமுகமளிக்குமாறும் மேலதிக விபரங்கள் தேவையானவர்கள் 0716354610 என்ற இலக்கத்துடன் செயலாளர் ஜௌஸி ஹாஜியாரை தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்திருக்கின்றார்கள்.
3 comments:
உண்மையா?
உண்மையல் இலவசமா?
அல்லாஹ் அவர்களுக்கு எங்களது துஆக்கள்
Post a Comment