குவைத் நாட்டில் கல்வி கற்கின்ற கஹட்டோவிட்ட மாணவர்களும் தொழிலாளர்களும் அங்கத்தவர்களாக இருக்கின்ற குவைத் மாணவர் தொழிலாளர் சங்கத்தினால் (KSWA) அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு ரூ. 50000.00 அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பாடசாலையில் நிலவும் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை நிறைவு செய்வதற்கு உதவுமாறு அதிபர் M.I.M. ரிஷான் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.
ஆன்மையில் விடுமுறைக்காக ஊர் வந்திருந்த KSWA பிரமுகர் அல் ஹாஜ் சீராஸ் அவர்களால் இத்தொகை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
புhடசாலையில் இடப்பற்றாக்குறை காணப்படுவதால் இப்பணத்தைக் கொண்டு ஒரு வகுப்பறையை நிர்மானிப்பது சிறந்தது என அதிபர், சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்களும் அதற்கு இணங்கினர்.
KSWA சுமார் 15 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்திலிருந்து ஊர் தேவைகளை நிறைவேற்றுவதில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment